ஐபிஎல் 2023: தூபே, ஜடேஜா பொறுப்பான ஆட்டம்; கேகேஆருக்கு 145 டார்கெட்!
கொல்காத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎ லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குஜராத், சென்னை அணிகள் ஏற்ழத்தால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமுள்ள இரு இடங்களை பிடிக்க மற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இதில் இன்று நடைபெறும் 61ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Trending
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ருதுராஜ் 17 ரன்களை எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அஜிங்கியா ரஹானேவும் 16 ரன்களில் அவரிடமே விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களைச் சேர்த்திருந்த கான்வே விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயூடு, மொயீன் அலி ஆகியோரது விக்கெட்டுகளை சுனில் நரைன் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே - ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now