Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - மகுடம் சூடப்போவது யார்?

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - மகுடம் சூடப்போவது யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - மகுடம் சூடப்போவது யார்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 03, 2025 • 01:08 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 03, 2025 • 01:08 PM

இதில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை வலுவானதாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் அபாரமாக செயல்பட்டு அணியை முன்னோக்கி அழைத்துச் செல்கின்றனர்.

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்ஷிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், நெஹால் வதேரா, ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்ஸ்னிஸ் உள்ளிட்டோர் இருப்பது பலமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பந்துவீச்சில் ஆர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன், ஹர்பிரீத் பிரார், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோருடன் யுஸ்வேந்திர சஹாலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது நிச்சயம் எதிரணிக்கு பெரும் தலைவலியாக அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நடப்பு ஐபிஎல் தொடரில் குறிப்பாக சொந்த மைதானங்களில் விளையாடிய போட்டிகளைத் தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட நிலையில் இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

அணியின் பேட்டிங் ஆர்டரில் விராட் கோலி, ரஜத் படிதார், பில் சால்ட், மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். இருப்பினும் இன்றைய போட்டியில் பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் என்பதால் அது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். மறுபக்கம் பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் புவனேஷ்வர் குமார், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்ம ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது எதிரணிக்கு சற்று அச்சத்தைக் கொடுக்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட்/டிம் செஃபெர்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், நுவான் துஷாரா, யாஷ் தயாள்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள்- 36
  • பஞ்சாப் கிங்ஸ்- 18
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 18

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - பில் சால்ட், ஜோஷ் இங்கிலிஸ், ஜிதேஷ் சர்மா, பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), பிரியன்ஸ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), மயங்க் அகர்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட்.
     

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement