
நாம் ஏற்கனேவே எந்த வீரர்களை சிஎஸ்கே கழற்றிவிட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பார்த்தோம். சிஎஸ்கேவில் அடுத்த ஆண்டு கேப்டன் முதல் கொண்டு பல்வேறு மாற்றங்கள் அணியில் நிகழ்த்தப்படலாம் என தெரிகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மினி ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கப்போகும் வீரர்களை பற்றி காணலாம்.
சிஎஸ்கே அணியில் தற்போது ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டர் தேவை. பிராவோ பந்துவீச்சில் ஜொலித்தாலும், அவருடைய பேட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மாற்றாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை சிஎஸ்கே குறிவைத்து எடுக்க அதிக வாய்ப்புள்ளது. சாம் கரண் ஏலத்தில் அதிக விலைக்கு போக வாய்ப்புள்ளதால், சிஎஸ்கேவும் அதற்கான பர்ஸ் பெலன்சை தயார்படுத்துவோம்.
இந்த ஆசை கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் , அடுத்த சீசனில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவேன் என உறுதி அளித்தால், அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளுமே போட்டி போடும். சாம் கரண் இருக்கும் அணியில் ஸ்டோக்ஸ் தேவையில்லை என்றாலும், அவர் கிடைக்கலானா இவர் என்ற பாணியில் சிஎஸ்கே களமிறங்கலாம். மேலும் ரெய்னாவுக்கு பிறகு நம்பர் 3 வீரர் பேட்டிங்கில் இல்லை. ஒரு வேலை ஸ்டோக்சை வைத்து அந்த இடத்தை சிஎஸ்கே நிரப்பலாம்.