
IPL: Bhuvneshwar Kumar surpasses Zaheer Khan for most number of wickets in powerplay (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார்.
அத்துடன், ஒட்டுமொத்த வேகப்பந்துவீச்சாளர்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), இலங்கை வீரர் மலிங்கா (170) ஆகியோரைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார்.