Advertisement

IRE vs AFG, 1st T20I: கானி, ஸத்ரான் அதிரடி; அயர்லாந்துக்கு 169 டார்கெட்!

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 09, 2022 • 21:38 PM
IRE vs AFG, 1st T20I: Afghanistan finish strong with a 21-run over
IRE vs AFG, 1st T20I: Afghanistan finish strong with a 21-run over (Image Source: Google)
Advertisement

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளா ஆஃப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது.

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தது.

Trending


அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் - உஸ்மான் கானி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். இதில் குர்பாஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பாக விளையாடி வந்த கானி அரைசதம் கடந்தார்.

ஆனால் அதன்பின் களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷாஹிதி 11 ரன்னிலும், நஜிபுல்லா சத்ரான் 15 ரன்னிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கானி 59 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் முகமது நபி 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் வந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 11 ரன்கள் ஆட்டமிழந்தார். இறுதியில் இஃப்ராஹிம் சத்ரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்ராஹிம் சத்ரான் 18 பந்துகளில் 29 ரன்களைச் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஜார்ஜ் டக்ரெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement