
அயர்லாந்து vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு, ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. அயர்லாந்து அணி ஏற்கெனவே இத்தொடரை இழந்துள்ளதால், நாளைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs இந்தியா
- இடம் - டப்ளின்
- நேரம் - இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)