Advertisement

IRE vs NZ, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!

அயர்லாந்துக்கு எதிரான முதாலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
IRE vs NZ, 1st ODI: Michael Bracewell's brilliant maiden ODI century helps New Zealand thrilling vai
IRE vs NZ, 1st ODI: Michael Bracewell's brilliant maiden ODI century helps New Zealand thrilling vai (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 10, 2022 • 11:43 PM

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்று வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 10, 2022 • 11:43 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங், கேப்டன் ஆண்ட்ரூ பால்பிரினி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending

பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் - ஹேரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் 39 ரன்காளில் மெக்பிரைன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கர்டிஸ் கேம்பரும் 43 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.

ஆனாலும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹேரி டெக்டர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெக்டர் 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் மற்றும் வில் யங் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ட்டின் கப்தில் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து டாம் லேதம், ஹென்றி நிக்கோலஸ், கிளென் பிலீப்ஸ் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

ஆனாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் பிரேஸ்வெல் சதமடித்ததுடன், இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். அதிலும் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர்களை விளாசி அசத்தினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் பிரேஸ்வெல் 127 ரன்களைச் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement