Advertisement
Advertisement
Advertisement

அயர்லாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Advertisement
அயர்லாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 11, 2024 • 08:56 PM

Ireland vs Pakistan Dream11 Prediction 2nd T20I: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிய்யைப் பதிவுசெய்து அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 11, 2024 • 08:56 PM

இதன்மூலம் அயர்லாந்து அணி தொடக்கத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் அயர்லாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரைக் கைப்பற்றும் முயற்சியிலும், அதேசமயம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியிலும் களமிறங்கும் என்பதால இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.  

Trending

IRE vs PAK : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - க்ளோன்டார்ஃப் கிரிக்கெட் மைதானம், டப்ளின்
  • நேரம் - இரவு 7.30 மணி 

IRE vs PAK: Pitch Report

டப்ளினில் உள்ள இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பந்துவீச்சாளர்களுக்கு தேவையான வேகம் மற்றும் ஸ்விங்கும் இருக்கும் என்பதால் அது பேட்டர்களுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IRE vs PAK: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 02
  • அயர்லாந்து - 01
  • பாகிஸ்தான் - 01

IRE vs PAK: Live Streaming Details

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் நேரலை செய்யவில்லை. அதேசமயம் ஃபேன் கோட் ஓடிடி செயலியில் இத்தொடரை குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ரசிகர்கள் இத்தொடரை காணலாம்.

Ireland vs Pakistan Predicted XI

அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பெர், ஜார்ஜ் டக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், பெஞ்சமின் வைட்

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசாம் (கே), ஃபகர் ஸமான், ஷதாப் கான், உஸ்மான் கான், இஃப்திகார் அஹ்மத், இமாத் வாசிம், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, அப்பாஸ் அஃப்ரிடி

IRE vs PAK: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ்: பாபர் ஆசாம் (கேப்டன்), ஃபகார் ஸமான், சைம் அயூப், ஹாரி டெக்டர், ஆண்ட்ரூ பால்பிர்னி
  • ஆல்-ரவுண்டர்கள்: மார்க் அதிர், இஃப்திகார் அஹ்மத், கர்டிஸ் காம்பெர் (துணைக்கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: கிரேய்க் யங், ஷஹீன் அஃப்ரிடி

Ireland vs Pakistan Fantasy Tips, IRE vs PAK: Dream11 Team, Ireland vs Pakistan: Predicted XIs, IRE vs PAK: Pitch Report, IRE vs PAK: Live Streaming Details, IRE vs PAK: Head-to-Head, IRE vs PAK: Dream11 Prediction 2nd T20I

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement