அனைத்து போட்டிகளும் முக்கியமானது தான் - ரஸ்ஸி வான் டெர் டுசென்
அனைத்து போட்டிகளுமே வீரர்களுக்கு முக்கியமானது தான் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டெட் டுசென் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் வளரும் நட்சத்திரம் ரஸ்ஸி வான் டெர் டுசென். இவர் சமீபத்தில் நடந்துமுடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்ல காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான தென் ஆப்பிரிக்க அணியில் வான் டெர் டுசென் இடம்பிடித்துள்ளார்.
Trending
இந்நிலையில் இத்தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வென் டெர் டுசென், அனைத்து போட்டிகளுமே வீரர்களுக்கு முக்கியமானது தான் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,“இங்கிலாந்து கேப்டன் ஈயன் மோர்கன் கூறுவதைப் போல, விளையாட்டின் முக்கியமில்லாதது என்று எதுவும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு போட்டியின் போதும் நீங்கள் புதிய அனுபவத்தை பெறுவீர்கள். அதுவே உங்கள் கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்க உதவும்.
தற்போது நாங்கள் 2 மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு விலகியுள்ளோம். எங்களில் சில வீரர்களுக்கு வாய்ப்புகளும் கிடைக்காமல் உள்ளனர். அதனால் ஒவ்வொரு தொடரின் போது நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியில் உங்களுக்கான இடம் உறுதியாக இருக்கும்.
வரவுள்ள அயர்லாந்து தொடரையும் நான் அப்படி தான் பார்க்கிறேன். இத்தொடரிலும் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென நினைக்கிறோம். அதனால் எந்தவொரு போட்டியையும் முக்கியமில்லாதது என்ற மனநிலையை நாங்கள் மாற்றிக்கொண்டு விளையாடுவது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now