Advertisement

IRE vs SA: மாலன், டி காக் ஆபார ஆட்டம்; இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!

அயர்லாந்து அணிக்கெதிரான மூனேறாவது ஒருநாள் போட்டியில் டி காக், ஜேன்மேன் மாலனில் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 347 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 16, 2021 • 18:57 PM
IRE vs SA: South Africa finish with 346/4 on the back of centuries from de Kock and Malan
IRE vs SA: South Africa finish with 346/4 on the back of centuries from de Kock and Malan (Image Source: Google)
Advertisement

அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஓருநாள் கிரிக்கெட் போட்டி டப்லினில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் - ஜேன்மேன் மாலன் இணை தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். 

Trending


இதில் குயிண்டன் டி காக் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 16ஆவது சதத்தையும், ஜென்மேன் மாலன் இரண்டாவது சதத்தையும் பதிவுசெய்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மேலும் இந்த இணை முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் முறையே 225 ரன்களைச் சேர்த்திருந்தது.

அதன்பின் 120 ரன்கள் எடுத்திருந்த டி காக் சிமி சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய மாலன் 150 ரன்களைக் கடந்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாட முற்பட்டு விக்கெட்டுகளைக் இழந்தனர். 

இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிக பட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேன்மேன் மாலன் 177 ரன்களை எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில் 2 விக்கெட்டை கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement