
Ireland batsman Neil Rock tests positive for COVID-19, Doheny called up as replacement (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகாள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று டப்லினில் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்து அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ள நெய்ல் ராக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மாற்று வீரராக ஸ்டீபம் டோஹேனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.