
Ireland go 2-0 up in their T20I series against the Netherlands (Image Source: Google)
அயர்லாந்து - நெதர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இதையடுத்து விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மிராண்டா அரைசதம் அடித்து உதவினார். ஆனால் பிற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை கேபி லூயிஸ் அதிரடியாக விளையடி அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.