Advertisement

IREW vs NEDW : டிலெனி, லாரா அபாரம்; அயர்லாந்து வெற்றி!

நெதர்லாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 27, 2021 • 11:40 AM
Ireland win in Malahide, beating Netherlands by 28 runs
Ireland win in Malahide, beating Netherlands by 28 runs (Image Source: Google)
Advertisement

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நெதர்லாந்து மகளிர் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நேற்று டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிலெனி 61 ரன்களை விளாசினார்.

Trending


இதையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து மகளிர் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணியால் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது. அயர்லாந்து அணி தரப்பில் லாரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement