
ஆசிய கோப்பை தொடர் வரும் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் ஒரு தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியும் பங்கேற்கிறது.
இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அறிவித்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாயின் ஷா அஃப்ரிடி, காயம் காரணமாக விலகினார். அவரின் விலகலால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஃப்ரிடி, தற்போது வரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பாகிஸ்தானுக்காக கடந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றிருந்தார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி , பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோற்றதுக்கு காரணம் ஷாயின் ஷா அப்ரிடி தான்.