
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர். இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்டியாவின் பெயர் இடம் பெறவில்லை.
ஹர்த்திக் பாண்டியா பந்துவீசாமல் இருப்பதே இந்திய அணியில் இடம் பெறாததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஹர்த்திக் பாண்டியாவுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பவுலிங் செய்யாமல் இருந்தார். கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் இந்தாண்டு ஐபிஎல்-ம் அவர் ஒரு பந்து கூட வீசவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்டில் குறைவான ஓவர்கள் அவ்வபோது வீசினார்.