
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியான நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.
நீண்ட நாட்கள் ஆலோசனைக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையில் பேட்டிங்கில் அனுபவமான வீரர்களும், பவுலிங்கில் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அது முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷான் ஆகியோர் தான்.
முகமது ஷமியின் வயதை கருத்தில் கொண்டு புறக்கணிக்கப்பட்டுள்ளார். சிராஜ் சரியான ஃபார்மில் இல்லாததால் கடந்த சில தொடர்களில் இருந்து ஒதுக்கப்பட்டார். ஆனால் இஷான் கிஷான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை தற்போது புறக்கணித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.