
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷான் ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் ஆனார் இஷான். மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வீரருக்கு ரூ.10 கோடிக்கு மேல் பணத்தை ஏலத்தில் செலவளித்தது.
சீசனின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அரைசதம் அடித்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபார்ம் சரிந்ததால், இஷானின் ஃபார்மும் அடிபட்டது.
அடுத்த ஆறு ஆட்டங்களில் இஷான் அடித்த ரன்கள் முறையே 14, 26, 3, 13, 0, 8 ஆகும். மும்பை அணி தனது முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்தது. இருப்பினும், அணியின் முதல் வெற்றி பெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்தார், ஆனால் மும்பை மீண்டும் தோல்வியடைந்ததால் அந்த அரைசதம் வீணாக முடிந்தது.