Advertisement
Advertisement
Advertisement

பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 09, 2024 • 20:37 PM
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேமயம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இப்போட்டியில்  வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் -  இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ்
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - மதியம் 2.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்கும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு அதிகளவு பவுன்ஸ் இருப்பதால் பேட்டர்களால் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் பந்தை ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 14
  • இஸ்லாமாபாத் யுனைடெட் - 06
  • முல்தான் சுல்தான்ஸ் - 08

உத்தேச லெவன்

இஸ்லாமாபாத் யுனைடெட்: அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ, ஆகா சல்மான், ஆசாம் கான், ஷதாப் கான் (கே), ஹைதர் அலி, இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், மேத்யூ ஃபோர்ட், ஹுனைன் ஷா, தைமல் மில்ஸ்

முல்தான் சுல்தான்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், முகமது ரிஸ்வான் (கே), டேவிட் மாலன், இஃப்திகார் அகமது, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, உசாமா மிர், அஃப்தாப் இப்ராஹிம், முகமது அலி

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: அசாம் கான், முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆகா சல்மான், ஷதாப் கான் (கேப்டன்), இமாத் வாசிம், இஃப்திகார் அகமது, கிறிஸ் ஜோர்டான்
  • பந்துவீச்சாளர்கள்: டேவிட் வில்லி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement