Advertisement

பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 04, 2024 • 13:33 PM
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்துகின்றனர். நடப்பு சீசனில் பெஷாவர் அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதேபோல், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இந்த சீசனில் இதுவரை விலையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் ஏறத்தாழ சமபலத்துடன் இருக்கும் இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் -  இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்கும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு அதிகளவு பவுன்ஸ் இருப்பதால் பேட்டர்களால் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் பந்தை ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • பெஷாவர் ஸால்மி - 12
  • இஸ்லாமாபாத் யுனைடெட் - 10

உத்தேச லெவன்

இஸ்லாமாபாத் யுனைடெட்: அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ, ஷதாப் கான் (கே), ஆகா சல்மான், ஆசாம் கான், ஜோர்டான் காக்ஸ், இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், நசீம் ஷா, ஹுனைன் ஷா, ரம்மன் ரயீஸ்.

பெஷாவர் ஸால்மி: பாபர் ஆசாம் (கே), சைம் அயூப், முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான், ரோவ்மன் பாவெல், ஆசிஃப் அலி, பால் வால்டர், லூக் வூட், நவீன்-உல்-ஹக், சல்மான் இர்ஷாத், ஆரிஃப் யாகூப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஆசாம் கான்
  • பேட்டர்ஸ்: பாபர் ஆசாம் (கேப்டன்), சைம் அயூப், காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: பில் வால்டர், ஷதாப் கான் (துணை கேப்டன்), ரோவ்மேன் பாவெல், ஆகா சல்மான்
  • பந்துவீச்சாளர்கள்: நவீன்-உல்-ஹக், நசீம் ஷா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement