Advertisement
Advertisement
Advertisement

பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்ட கிளாடியேட்டர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

பிஎஸ்எல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Advertisement
Islamabad United vs Quetta Gladiators, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI
Islamabad United vs Quetta Gladiators, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 10, 2021 • 10:00 PM

பிஎஸ்எல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 10, 2021 • 10:00 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் -  இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்ட கிளாடியேட்டர்ஸ்
  • தேதி - 2021 ஜூன் 11 வெள்ளிக்கிழமை
  • நேரம் - இரவு 9:30 மணி
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி

போட்டி முன்னோட்டம்

இஸ்லாமாபாத் யுனைடெட்

நேற்று லாகூர் கலந்தர்ஸ் அணியுடனான போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி கடைசி பந்தில் தோல்வியைச் சந்திதது. 

அணியின் பேட்டிங் வரிசை சரிவர விளையாடததே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இனிவரும் போட்டிகளில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை எந்த குறையும் இல்லை என்றாலும், ரன்களைக் கட்டுபடுத்த வேண்டிய அவசியத்தில் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். 

குயிட்ட கிளாடியேட்டர்ஸ்

நடப்பு சீசனில் குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணி படு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஃபாஃப் டூ பிளேஸிஸ், ரஸ்ஸல், அசாம் கான் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருந்த போதிலும் அந்த அணியால் சரிவர விளையாட முடியவில்லை. அதேசமயம் பந்துவீச்சிலும் ஷாஹிர் கான், முகமது நவாஸ் அகியோரை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. 

இதனால் இனிவரும் போட்டிகளில் வெற்றியைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முயற்சியில் குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

பிஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 முறையும், குயிட்ட கிளாடியேட்டர்ஸ் 7 முறையும் வெற்றியைப் பெற்றுள்ளன.

உத்தேச அணி

இஸ்லாமாபாத் யுனைடெட்: உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, சதாப் கான் (கே), உசேன் தலாத், இப்திகார் அகமது, ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ரோஹைல் நசீர், ஹசன் அலி, ஃபவாத் அகமது, முகமது வாசிம் ஜூனியர்

குயிட்ட கிளாடியேட்டர்ஸ்: உஸ்மான் கான், சைம் அயூப், ஃபாஃப் டு பிளெஸிஸ், அசாம் கான், சர்பராஸ் அகமது, ஆண்ட்ரே ரஸ்ஸல், முகமது நவாஸ், ஜாஹிர் கான், ஜாஹித் மஹ்மூத், ஜாக் வைல்ட்முத், முகமது ஹஸ்னைன்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - அசாம் கான்
  • பேட்ஸ்மேன்கள் - ஆசிப் அலி, உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, ஃபாஃப் டு பிளெஸிஸ்
  • ஆல்ரவுண்டர்கள் - பஹீம் அஷ்ரப், இப்திகார்-அகமது, முகமது நவாஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல்
  • பந்து வீச்சாளர்கள் - ஹசன் அலி, முகமது ஹஸ்னைன்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement