Advertisement

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி மீது அனுதாபம் உண்டு - ஹர்திக் பாண்டியா!

பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாணடியா தெரிவித்துள்ளார்.

Advertisement
It Was Punjab Kings' Game, I Have Sympathy For Them: GT Captain Hardik Pandya
It Was Punjab Kings' Game, I Have Sympathy For Them: GT Captain Hardik Pandya (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 09, 2022 • 01:03 PM

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் ராகுல் திவேதியா கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 09, 2022 • 01:03 PM

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது.

Trending

லிவிங்ஸ்டோன் 27 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்) தவான் 30 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட்டும், நல்காண்டே 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராகுல் திவேதியா ஆட்டத்தின் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்து குஜராத்தை வெற்றி பெற வைத்தார். சுப்மன்கில் 59 பந்தில் 96 ரன்னும் (11 பவுண்டரி, 1சிக்சர்) தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 30 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 18 பந்தில் 27 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.

குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அந்த அணி மட்டும் தான் இதுவரை தோல்வி அடையவில்லை. வெற்றி குறித்து குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறுகையில், 

“ஆட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததால் நான் நடுநிலையாகி விட்டேன். ராகுல் திவேத்தியாவுக்கு எனது வாழ்த்துக்கள். நெருக்கடியில் அவர் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்தது பாராட்டத்தக்கது. சுப்மன்கில் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருக்கு சாய் சுதர்சன் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரது பொறுப்பான பேட்டிங்கால் தான் எங்களால் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து வர முடிந்தது. பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு” என தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement