Advertisement

உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? ஃபாஃப் டூ பிளெசிஸ் பதில்!

தென் ஆப்பிரிக்காவுக்கு நிஜமாகவே நல்ல அணி கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற அணியை தாண்டி அவர்களது சொந்த இடத்தில் வெல்வது என்பது கடினம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? ஃபாஃப் டூ பிளெசிஸ் பதில்!
உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? ஃபாஃப் டூ பிளெசிஸ் பதில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 31, 2023 • 09:24 PM

தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் மிக முக்கியமான தொடராக, ஆசிய அணிகள் பங்கு பெறும் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் உலகக் கோப்பைக்கு விளையாட தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 31, 2023 • 09:24 PM

இதற்கு அடுத்து இந்தியாவில் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை இந்தியா மற்ற ஆசிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளாமல், தனியாக இந்தியாவில் வைத்து நடத்துகிறது. இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகளில் ஆசிய கண்டத்தின் ஐந்து அணிகள் போக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்து ஆகிய ஐந்து அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

Trending

அக்டோபர் மாதம் 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இத்தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கிறது. இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை வெல்ல அதிகபட்ச வாய்ப்பு இருக்கும் அணி எது என்று, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளிசிஸ் தனது கணிப்பை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “தென் ஆப்பிரிக்காவுக்கு நிஜமாகவே நல்ல அணி கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற அணியை தாண்டி அவர்களது சொந்த இடத்தில் வெல்வது என்பது கடினம். அதேபோல் ஐசிசி கோப்பைகளை நிறைய முறை வென்றுள்ள ஆஸ்திரேலியாவையும் தாண்டுவது கடினம். இந்த இரண்டு அணிகள்தான் முக்கியமானவை. தென் ஆப்பிரிக்க அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வலுவாக இருக்கிறது. 

நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடரில் அவர்கள் நல்ல அனுபவத்தை பெறுவார்கள். துணைக் கண்டத்தில் இல்லாத அனைத்து அணிகளுக்கும், துணைக் கண்டத்தில் விளையாடுவது என்பது எப்பொழுதும் சவாலாகவே இருக்கும். குறிப்பாக 50 ஓவர் கிரிக்கெட்டில். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு சமமான ஆடுகளங்கள் கிடைக்கும். ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் சுழற் பந்துவீச்சாளர்கள் வெளியில் வருவார்கள். இது கடினமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement