Advertisement

தோனியின் முடிவு வரவேற்கத்தக்கது - சுனில் கவாஸ்கர்!

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவேன் என்று தோனி அறிவித்திருப்பது அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement
"It's A Wonderful Thing": Sunil Gavaskar On MS Dhoni's Big Update On His Chennai Super Kings Future (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 21, 2022 • 12:50 PM

இந்த ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அணி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 10 ஆட்டத்தில் தோற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 21, 2022 • 12:50 PM

கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த ஐபிஎல் போட்டியோடு தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Trending

ஆனால் நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் அடுத்த ஐபிஎல் (2023) போட்டியிலும் ஆடுவேன் என்று தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய தோனி, “நிச்சயமாக அடுத்த ஐபிஎல் தொடரில் ஆடுவேன். எனது கடைசி போட்டியை சென்னையில் விளையாடாமல் விலகினால் நியாயமாக இருக்காது. சென்னையில் ஆடாமல் விடைபெற்றால் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு நன்றாக இருக்காது” என்றார்.

தோனியின் இந்த முடிவை கவாஸ்கர் வரவேற்று உள்ளார். முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது, “அடுத்த ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன் என்று டோனி அறிவித்து இருப்பது சிறந்ததாகும். இதை ஒரு அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன்.

அவர் அந்த அணிக்கும், ஆதரவளித்தவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறார். டோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து இதுவரை காணாத அளவிற்கு உச்சத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.

அடுத்த ஆண்டு அவர் விளையாடும் போட்டிகளில் ராஞ்சி மைதானமும் ஒன்றாக அமையலாம். 10 மைதானங்களில் விளையாடுவார். இதனால் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பை பெறுவார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement