
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 165 ரன்களை இந்திய அணி சேஸிங் செய்தபோது 15வது ஓவரின் முடிவு இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
அதன்பின்னர் எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய போட்டியை அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழுந்ததால் இறுதி நேரத்தில் போட்டி சற்று போராடி கடைசி ஓவரின் 4வது பந்தில் முடித்தது. நியூசிலாந்து நிர்ணயித்த 165 ரன்களை இந்திய அணி 19.4 ஓவர்களில் அடித்தாலும் இறுதி நேரத்தில் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் என மூவரும் இறுதி நேரத்தில் ஆட்டமிழக்க சற்று இக்கட்டான வேளையில் ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து போட்டியை முடித்துக் கொடுத்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இளம் வீரரான சூர்யகுமார் யாதவ்-க்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இதுபோன்ற போட்டிகளில சேசிங் செய்யும்போது சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். மேலும் அடுத்த ஆண்டே மற்றொரு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இருப்பதனால் நிச்சயம் இது போன்ற சேசிங்கில் எந்தவித இரக்கமின்றி எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும்.