Advertisement

பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 25, 2024 • 22:28 PM
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

ஒன்பதாவது சீசனீ பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் இரு அணியும் விளையாடிய முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றி, இரு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியளின் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. இதனால் நாளை போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இஸ்லாமாபாத் vs பெஷாவர் ஸால்மி 
  • இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கடாஃபி கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. மேலும் இந்த மைதானத்தின் பேட்டிங் சராசரி 162 ரன்களாக உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டி அதிக ரன்கள் கொண்ட போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் 12ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள பெஷாவர் ஸால்மி அணி 211 ரன்களை குவித்து அசத்தியுள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 21
  • பெஷாவர் ஸால்மி - 11
  • இஸ்லாமாபாத் யுனைடெட் - 10

உத்தேச லெவன்

இஸ்லாமாபாத் யுனைடெட்: காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஆகா சல்மான், ஷதாப் கான் (கே), ஆசாம் கான், ஜோர்டான் காக்ஸ், இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், நசீம் ஷா, ஹுனைன் ஷா, ரம்மன் ரயீஸ்.

பெஷாவர் ஸால்மி: சைம் அயூப், பாபர் ஆசாம் (கே), முகமது ஹாரிஸ், ஹசிபுல்லா கான், ரோவ்மன் பாவெல், ஆசிஃப் அலி, பால் வால்டர், லூக் வூட், நவீன் உல் ஹக், ஆரிஃப் யாகூப், சல்மான் இர்ஷாத்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

விக்கெட் கீப்பர்கள்: முகமது ஹாரிஸ், ஜோர்டான் காக்ஸ்

பேட்டர்ஸ்: பாபர் ஆசாம், அலெக்ஸ் ஹேல்ஸ்(கேப்டன்), காலின் முன்ரோ, சைம் அயூப்

ஆல்-ரவுண்டர்கள்: ஆகா சல்மான், ஷதாப் கான், ரோவ்மன் பாவெல் (துணைக்கேப்டன்)

பந்துவீச்சாளர்கள்: நசீம் ஷா, நவீன் உல் ஹக்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement