
இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கேப்டன்ஷிப் மட்டும்தான் நன்றாகச்செய்கிறார், ஆனால், பேட்டிங்கை முழுமையாக மறந்துவிட்டார் என்றுதான் கூற முடியும். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து ஒரே போட்டியில்தான் 47 ரன்கள் சேர்த்தார், அதுவும், இந்தியாவில் நடந்த முதல் சுற்றுப் போட்டிகளி்ல் ஸ்கோர் செய்தார். ஆனால், ஐக்கியஅரபு அமீரகம் சென்றபி்ன் ஒரு போட்டியில்கூட மோர்கன் இரட்டை இலக்க ஸ்கோரை அடிக்கவில்லை.
2021ஆம் ஆண்டில் இதுவரை 40 டி20 போட்டிகளி்ல் 35 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மோர்கன் 499 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் மோர்கனின் சராசரி 16.63 ரன்கள்தான், அதிபட்சம் ஐபிஎல் தொடரில் அடித்த 47 ரன்கள்தான். இந்த ஆண்டில் டி20 போட்டியில் இதுவரை ஒரு அரைசதம் கூட மோர்கன் அடிக்கவில்லை.
மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் மோர்கன் எவ்வாறு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்காக கேப்டன்ஷிப் மட்டும் செய்யப்போகிறாரா அல்லது ஏதேனும் ஸ்கோர் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்தது.