
Jadeja becomes sixth cricketer to register 150+ score, five wickets in same Test (Image Source: Google)
மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 574/8 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 175 ரன்களை விளாசினார்.
பின்னா், தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 108/4 ரன்களை சோ்த்திருந்தது. இரண்டாம் நாள் முடிவில், இந்தியா 466 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இதையடுத்து, இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா, தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசியது. குறிப்பாக, பேட்டிங்கில் கலக்கிய ஜடேஜா பந்துவீச்சிலும் இலங்கையை திணறடித்தார். நிசாங்காவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியெறினர். 174 ரன்கள் எடுத்திருந்தபோது, இலங்கை ஆல் அவட் ஆனது. சிறப்பாக விளையாடிய நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார்.