
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசன் முதல் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருக்கிறது. இதில் இன்னும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று ஜடேஜாவின் கேப்டன்சி சர்ச்சை தான்.
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 6 தோல்விகளை தழுவியது. கேப்டன் பதவியில் இருந்து விலகியவுடன் அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. கேப்டன்சி மாற்றியதில், அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அவர் வெளியேறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அதனை உறுதி செய்யும்படியான விஷயங்களை ஜடேஜா செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் பதிவுகளை திடீரென முற்றிலுமாக நீக்கியுள்ளார். சிஎஸ்கே குறித்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.