
James Vince helps Southern Brave open account (Image Source: Google)
தி ஹண்ரட் ஆடவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் - பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
இதன்மூலம் 100 பந்துகளில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 151 ரன்களைச் சேர்த்ததில் இதில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 68 ரன்களை சேர்த்தார்.