உலகக்கோப்பை தொடரில் சாதனை நிகழ்த்திய கோஸ்வாமி!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி சமன்செய்துள்ளார்.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்களை எடுத்தது. அமிலியா கெர் 50 ரன்னும், எமி சதர்வைய்ட் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 198 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி நேற்று ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் உலக கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இவர் சமன் செய்தார்.
ஆஸ்திரேலியாவின் வின் புல்ஸ்டன் ஏற்கனவே உலக கோப்பையில் 39 விக்கெட் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now