
Cricket Image for மந்தானா அதிரடியில் தென்ஆப்பிரிகாவை வீழ்த்திய இந்தியா! (Image Source: twitter)
தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இதில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி லக்னோவில் இன்று (மார்ச் 9) நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, தென்ஆப்பிரிக்க அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் லாரா குட்டால் (Lara Goodall) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருப்பினும் 49 ரன்கள் எடுத்திருனத் குட்டால் மான்சி ஜோஷி பந்துவீச்சில் சுஷ்மா வெர்மாவிடம் கேட்ச் கொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதனையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள் ஜூலன் கொஸ்வாமியின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.