Advertisement

இணையத்தில் வைரலாகும் நீஷமின் பதில்!

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடாத காரணம் குறித்து நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் பதில் அளித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 11, 2021 • 14:39 PM
Jimmy Neesham Explains Why He Wasn't Celebrating After New Zealand Beat England In Semi-Final Clash
Jimmy Neesham Explains Why He Wasn't Celebrating After New Zealand Beat England In Semi-Final Clash (Image Source: Google)
Advertisement

அபுதாபியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். கான்வே 46 ரன்களும் ஜிம்மி நீஷம் 11 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தார்கள்.  

Trending


இதன்மூலம் கடந்த மூன்று வருடங்களில் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில்  இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி.

இந்நிலையில் அரையிறுதியை வென்ற தருணத்தில் எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்த நியூசிலாந்து வீரர்கள், வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த நீஷம் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. 

இந்நிலையில் இதற்குப் பதில் அளித்த நீஷம், “வேலை முடிந்துவிட்டதா? நான் அப்படி நினைக்கவில்லை” என்றார்.

Also Read: T20 World Cup 2021

அதாவது, உலகக் கோப்பையை வெல்லும் பணி இன்னும் நிறைவடையவில்லை, இறுதிச்சுற்றிலும் தங்கள் அணி சிறப்பாக விளையாட வேண்டும் எனும் அர்த்தத்தில் அவர் சொன்ன பதிலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement