
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கடைசி நாளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி அட்டகாசமாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது.
இதில் ஜானி பேர்ஸ்டோவ் 92 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்களும் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய அணி கடைசி நாளில் கடினமான இலக்கை விரட்டியதுபோல இங்கிலாந்து அணி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடைசி நாளில் அதிரடியாக விளையாடி மறக்க முடியாத வெற்றியை அடைந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது (குறைந்தது 100 ரன்கள் எடுத்த வீரர்களில்) அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பேர்ஸ்டோவ்.