Advertisement

எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan February 03, 2024 • 13:39 PM
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டர்பன் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி இப்போட்டியில் இமாலய வெற்றியைப் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. மேலும் முந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி உள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - வண்டரர்ஸ் மைதானம், ஜொஹன்னஸ்பர்க்
  • நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ஜோஹ்ன்னஸ்பர்க் ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து இமாலய இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவும்.

நேரலை

இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 02
  • டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01

உத்தேச லெவன்

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: லூயிஸ் டு ப்ளூய், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், வான் மேட்சன், மொயீன் அலி, கைல் சிம்மண்ட்ஸ், டொனோவன் ஃபெரீரா, டக் பிரேஸ்வெல், லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர்.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: மேத்யூ ப்ரீட்ஸ்கி, டோனி டி ஸோர்ஸி, குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், கீமோ பால், ஜேஜே ஸ்மட்ஸ், வியான் முல்டர், கேசவ் மகாராஜ் (கே), ஜூனியர் தலா, நூர் அகமது, நவீன் உல் ஹக்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - ரீசா ஹென்ட்ரிக்ஸ், லுக் டு ப்ளூய், மேத்யூ பிரீட்ஸ்கி (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - ஜேஜே ஸ்மட்ஸ் (துணை கேப்டன்), மொயீன் அலி
  • பந்துவீச்சாளர்கள் - லிசாத் வில்லியம்ஸ், கேசவ் மகாராஜ், ஜூனியர் தலா, நூர் அகமது.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement