எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Joburg Super Kings vs Paarl Royals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராய்ல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு எஸ்ஏ20 தொடரில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் வெற்றிகளை பதிவுசெய்தாலும், தொடரின் இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளைத் தழுவி பிளே ஆஃப் வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
JSK vs PR, SA20 2025: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பார்ல் ராயல்ஸ்
- இடம் - வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானம், ஜொஹன்னஸ்பர்க்
- நேரம் - ஜனவரி 30, இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)
JSK vs PR Pitch Report
இப்போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்க்ளுக்கு நல்ல ஆதரவும் கிடைக்கும் என்பதால், இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதையே விரும்புகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 27 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 14 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 13 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 176 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 283 ரன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
JSK vs PR: Where to Watch?
எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
JSK vs PR Dream11 Prediction
- விக்கெட் கீப்பர் - ஜானி பேர்ஸ்டோவ், டெவான் கான்வே
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், ஃபாஃப் டு பிளெசிஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்
- ஆல்ரவுண்டர் - ஜோ ரூட் (கேப்டன்)
- பந்து வீச்சாளர்கள் - ஹார்டஸ் வில்ஜோன், லூதோ சிபம்லா, பிஜோர்ன் ஃபோர்டுயின், குவேனா மபாகா, முஜீர் உர் ரஹ்மான் (துணைத் தலைவர்)
Joburg Super Kings vs Paarl Royals Probable Playing XI
Joburg Super Kings Probable Playing XI: டெவோன் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விஹான் லுபே, ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, டோனோவன் ஃபெரீரா, எவான் ஜோன்ஸ், ஹார்டஸ் வில்ஜோன், இம்ரான் தாஹிர், லூதோ சிபம்லா, மதிஷா பதிரானா.
Paarl Royals Probable Playing XI :லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஜோ ரூட், ரூபின் ஹெர்மன், மிட்செல் வான் பியூரன், டேவிட் மில்லர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், துனித் வெல்லாலகே, தயான் கலிம், பிஜோர்ன் ஃபோர்டுயின், முஜீப் உர் ரஹ்மான், குவேனா மபாகா.
JSK vs PR Dream11 Prediction, JSK vs PR Dream11 Team, Today Match JSK vs PR, SA20 2025, Fantasy Cricket Tips, JSK vs PR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Joburg Super Kings vs Paarl Royals
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:* இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now