Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த காகிசோ ரபாடா!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 7ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை காகிசோ ரபாடா படைத்துள்ளார்.

Advertisement
Kagiso Rabada becomes 7th South African bowler to take 250 Test wickets
Kagiso Rabada becomes 7th South African bowler to take 250 Test wickets (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 20, 2022 • 02:10 PM

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 20, 2022 • 02:10 PM

இதையடுத்து 2ஆவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Trending

இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 7 தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 

இந்த பட்டியளில் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 முதல் 6ஆவது இடங்கள் முறையே ஷான் பொல்லாக், நிதினி, டொனால்ட், மோர்னே மார்கல், கல்லீஸ் ஆகியோர் உள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement