உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய மைல் கல்லை எட்டிய வில்லியம்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற புதிய மைல்கல்லை கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார்.
தற்போதுள்ள கிரிக்கெட் உலகத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டுகளிலும் மிகச்சிறப்பாக விளையாடி, நியூசிலாந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் - நியூசிலாந்தும் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 32 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
Trending
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஒருமுனையில் விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் நங்கூரமிட்டு பொறுமையாக பேட்டிங் ஆடிய கேன் வில்லியம்சன், 177 பந்தில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இருப்பினும் இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,178 ரன்களை குவித்துள்ள வில்லியம்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த 2ஆவது நியூசிலாந்து வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்த பட்டியலில் 7,517 ரன்களுடன் ராஸ் டெய்லர் முதலிடத்தில் இருக்கும் நிலையில், 7,172 ரன்களுடன் 2ஆம் இடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கை பின்னுக்குத்தள்ளி கேன் வில்லியம்சன் இச்சாதனையை படைத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now