Advertisement

ஐபிஎல் 2022: அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம் - கேன் வில்லியம்சன்!

ஐபிஎல் 2022 தொடரின் 65ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறக்காரணம் புவனேஷின் 19ஆவது ஓவர்  ஹைதராபாத் கேப்டன் புகழ்ந்து கூறினார். 

Advertisement
Kane Williamson Praises The Indian Uncapped Players For Their Potential And Skills
Kane Williamson Praises The Indian Uncapped Players For Their Potential And Skills (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 18, 2022 • 01:50 PM

நேற்று (மே-17) நடந்த பரப்பரபான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 193 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 17வது ஓவர் வரை 149 ரன் எடுத்து இருந்தது. ரமன்தீப் 0, டிம் டேவிட் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 18 பந்துகளில் 45 ரன்கள் தேவைப்பட்டது.  

Bharathi Kannan
By Bharathi Kannan
May 18, 2022 • 01:50 PM

ஆட்டத்தின் 18ஆவது ஓவர் வீசிய நட்ராஜன் ஓவரில் டிம் டேவிட் 4 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 26 ரன்களை அணிக்கு சேர்த்தார். கடைசி பந்தில் ரன் அவுட் ஆனாலும் தேவையான ரன்களை அடித்து விட்டு தான் ஆட்டமிழந்தார்.

Trending

மும்பை அணிக்கு 12 பந்துகளில் 19 ரன்கள் தேவை. 19வது ஓவர் வீச வந்தார் புவனேஷ்வர் குமார். அவர் அந்த ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து ஒரு ரன் கூட வழங்கவில்லை. இறுதியில் மும்பை அணி 190 ரன்கள் எடுத்தது. 3 ரன்கள் விதியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிப் பெற்றது. 

இதுகுறித்து பேசிய ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன், “டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசுகிறோம். அதிலும் புவனேஷ் இந்த ஐபிஎல் தொடரிலேயே சிறந்த பந்து வீச்சாளராக உள்ளார். அவரது (19வது ஓவர்) மெய்டன் விக்கெட் ஆட்டதின் திருப்பு முனையாக அமைந்தது” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement