
ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் சில போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவிய கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அடுத்த 5 போட்டிகளில் தொடர் வெற்றிகளையும், அடுத்த 5 போட்டிகளில் தொடர் தோல்விகளையும் சந்தித்தது.
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய போட்டியில் மும்பை இந்தியன்ஸை நேற்று வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டியிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பின்புறமாக உள்ளது.
இந்நிலையில், இந்த முக்கியமான கட்டத்தில் சன்ரைசர்ஸுக்கு கேன் வில்லியம்சன் ஒரு கேப்டனாக கண்டிப்பாக தேவைப்படும் நேரத்தில், வில்லியம்சன் ஐபிஎல்லில் இருந்து விலகி நியூசிலாந்துக்கு செல்கிறார். வில்லியம்சனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், ஐபிஎல்லில் கடைசி லீக் போட்டியில் ஆடாமல் நியூசிலாந்துக்கு செல்கிறார்.