Advertisement
Advertisement
Advertisement

ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் - கபில் தேவ்!

கேப்டனாக ரோஹித் சர்மா அதிக ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Advertisement
ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் - கபில் தேவ்!
ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் - கபில் தேவ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 16, 2023 • 04:47 PM

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது ஆசியக் கோப்பைக்கு தயாராகி வருகிறார். நடப்பாண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 16, 2023 • 04:47 PM

இந்த தொடருக்காக ரோஹித் சர்மா தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ரோஹித் சர்மா, போட்டிகளில் அதிக ஆக்ரோஷத்துடன் செயல்படவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் சமீப காலங்களில் நான் பார்த்த மிகச்சிறந்த தொடர்களில் ஒன்றாகும். கிரிக்கெட் என்றால் அப்படி விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ரோஹித் சிறந்தவர்தான். ஆனால் அவர் அதிக ஆக்ரோஷத்துடன் செயல்படவேண்டும்.

இங்கிலாந்து போன்ற அணிகள் இப்போது எப்படி விளையாடுகின்றன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அது நாங்கள் மட்டுமல்ல. கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் இந்த வழியில் சிந்திக்க வேண்டும். விளையாட்டில் வெற்றி பெறுவது அனைத்து அணிகளுக்கும் அதிக முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement