
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதி சுற்று வரை முன்னேற்றி சென்ற அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் விளையாடவில்லை.
இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 458 ரன்கள் அடித்துள்ளார், ஓரிரு போட்டிகளை தவிர ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இவருடைய பங்களிப்பு அந்த அளவிற்கு இல்லை. அதேபோன்று சர்வதேச போட்டிகளிலும் இவர் மிக மோசமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுத்த போதும் அதை அனைத்தையுமே வீனடித்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக 13 டி20 போட்டிகளில் பங்கேற்று, வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக இவர் இந்திய அணியிலிருந்து நீண்டகாலமாக புறக்கணிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் சஞ்சு சாம்சன் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.