பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை- கபில்தேவ்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்க தேவையில்லை என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரவிசாஸ்திரி தற்போது அணியின் பயிற்சியாளராக உள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையோடு அவரது பதவி காலம் முடிவடைகிறது.
இதற்கிடையே இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு ராகுல்டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Trending
இந்த நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவிசாஸ்திரிக்கு பதிலாக டிராவிட் நியமிக்கப்பட வேண்டுமா? என்று முன்னாள் கேப்டன் கபில் தேவிடம் கேள்வி எழுப்பப்ப பட்டது.
இதுகுறித்து பேசிய, “இதைபற்றி தற்போது பேச வேண்டிய தேவையில்லை. இலங்கை தொடர் முடியட்டும். அங்கு வீரர்கள் வெளிப்படுத்திய செயல் திறனை அறிந்து கொள்வோம். ஒரு புதிய பயிற்சியாளரை நியமிக்க முயற்சி செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை.
தற்போது ரவிசாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் சிறப்பாகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now