இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது 2 - 1 என்ற நிலையில் உள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இளம் வீரர் இஷான் கிஷான் 76, 34, 54 ரன்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இஷான் கிஷான் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டாலும், ஐபிஎல் தொடரின் போதும் பெரும் விமர்சனங்களை சந்தித்தார். இதற்கு காரணம் மும்பை அணி அவரை ரூ.15.25 கோடிக்கு வாங்கியதற்கு இஷான் கிஷான் நியாயமாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தான். எனினும் இஷான் 14 போட்டிகளில் 418 ரன்களை குவித்தார். இது கடந்த 2 சீசன்களை விட அதிகம்தான் ஆகும்.
இப்படி இருக்கையில் பலரும், அவர் சரியாக ஆடவில்லை என நினைத்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் ஒருபடி மேல் சென்று " இஷான் கிஷான் ரூ.15 கோடிக்கு வாங்குவதற்கெல்லாம் ஒன்றும் வொர்த் ( தகுதி ) இல்லை என பகிரங்கமாக கூறினார்.