அஸ்வின் 500 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் - கபில் தேவ்!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் கபில்தேவின் 434 விக்கெட் என்ற சாதனையை முறியடித்தார். அவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அஸ்வின் 85 போட்டிகளில் 436 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “இந்திய அணியில் சமீப காலமாக அஸ்வினுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.
Trending
அவருக்கு தொடர்ந்து அணியில் இடம்கொடுத்திருந்தால் எப்போதோ 434 விக்கெட் என்ற இலக்கைக் கடந்திருப்பார்.
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக என்னிடம் இருந்த 2ஆவது இடத்தை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
அஸ்வின் வியக்கத்தக்க வீரர். சிறந்த புத்தசாலித்தன்மான பந்து வீச்சாளர். அடுத்து அவர் 500 விக்கெட் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதனை அடைய முயற்சி செய்து கட்டாயம் சாதிப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அதையும் தாண்டி அஸ்வின் அசத்தலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now