Advertisement

பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து கராச்சி கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 27, 2024 • 20:06 PM
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியளின் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேசமயம் மறுபக்கம் கராச்சி கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் நான்காம் இடத்தை தக்கவைத்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ்
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • இஸ்லாமாபாத் யுனைடெட் - 14
  • கராச்சி கிங்ஸ் -  06

உத்தேச லெவன்

கராச்சி கிங்ஸ்: முகமது அக்லக், ஷான் மசூத் (கே), ஜேம்ஸ் வின்ஸ், சோயிப் மாலிக், கீரன் பொல்லார்ட், முகமது நவாஸ், இர்ஃபான் கான், டேனியல் சாம்ஸ், மிர் ஹம்சா, ஹசன் அலி, தப்ரைஸ் ஷம்சி.

இஸ்லாமாபாத் யுனைடெட்: காலின் முன்ரோ, ஆகா சல்மான், ஆசாம் கான், ஷதாப் கான் (கே), ஹைதர் அலி, ஜோர்டான் காக்ஸ், இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், ஹுனைன் ஷா, நசீம் ஷா, டைமல் மில்ஸ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜோர்டான் காக்ஸ், ஆசாம் கான்
  • பேட்டர்ஸ்: கீரன் பொல்லார்ட், காலின் முன்ரோ, ஜேம்ஸ் வின்ஸ்
  • ஆல்ரவுண்டர்கள்: சோயிப் மாலிக் (துணை கேப்டன்), ஆகா சல்மான், ஷதாப் கான் (கேப்டன்), டேனியல் சாம்ஸ்
  • பந்துவீச்சாளர்கள்: ஹசன் அலி, நசீம் ஷா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement