Advertisement
Advertisement
Advertisement

பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 11, 2024 • 12:45 PM
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஷான் மசூத் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஸால்மி, முல்தான் சுல்தன்ஸ், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனால் இன்று நடைபெறும் போட்டியானது பெரிதளவில் மிக்கியதுவம் இல்லாத போட்டியாக பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி 
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • கராச்சி கிங்ஸ் - 06
  • பெஷாவர் ஸால்மி- 14

உத்தேச லெவன்

கராச்சி கிங்ஸ்: டாம் செய்ஃபெர்ட், ஷான் மசூத் (கே), சோயப் மாலிக், ஜேம்ஸ் வின்ஸ், கீரன் பொல்லார்ட், இர்ஃபான் கான், அன்வர் அலி, ஹசன் அலி, அராபத் மின்ஹாஸ், ஜாஹித் மஹ்மூத், பிளெஸ்ஸிங் முசர்பானி.

பெஷாவர் ஸால்மி: பாபர் ஆசாம் (கே), சைம் அயூப், டாம் கொஹ்லர் காட்மோர், முகமது ஹாரிஸ், ரோவ்மன் பவல், ஹசீபுல்லா கான், அமீர் ஜமால், லூக் வுட், நவீன் உல் ஹக், மெஹ்ரான் மும்தாஸ், குர்ரம் ஷெஹ்சாத்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ஹாரிஸ், டிம் செய்ஃபெர்ட்
  • பேட்டர்ஸ்: ஜேம்ஸ் வின்ஸ், பாபர் ஆசாம் (கேப்டன்), சைம் அயூப் (துணை கேப்டன்), கீரன் பொல்லார்ட்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோயப் மாலிக், ரோவ்மேன் பவல், அமீர் ஜமால்
  • பந்துவீச்சாளர்கள்: ஆசிர்வாதம் முசர்பானி, நவீன்-உல்-ஹக்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement