Advertisement

பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan February 28, 2024 • 23:02 PM
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கராச்சி கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் நான்காம் இடத்தை தக்கவைத்துள்ளது. அதேசமயம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் -  கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 16
  • கராச்சி கிங்ஸ் -  06
  • குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - 11

உத்தேச லெவன்

கராச்சி கிங்ஸ்: முகமது அக்லக், ஷான் மசூத் (கே), ஜேம்ஸ் வின்ஸ், சோயிப் மாலிக், கீரன் பொல்லார்ட், முகமது நவாஸ், இர்ஃபான் கான், டேனியல் சாம்ஸ், மிர் ஹம்சா, ஹசன் அலி, தப்ரைஸ் ஷம்சி.

குயிட்டா கிளாடியேட்டர்ஸ்: ஜேசன் ராய், சவுத் ஷகீல், கவாஜா நஃபே, ரைலீ ரூஸோவ் (கேட்ச்), சர்ஃபராஸ் அகமது, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், அகீல் ஹொசைன், முகமது வாசிம் ஜூனியர், உஸ்மான் தாரிக், முகமது அமீர், அப்ரார் அகமது

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: முகமது அக்லக்
  • பேட்டர்ஸ்: கீரன் பொல்லார்ட், ஜேசன் ராய்(கேப்டன்), கவாஜா நஃபே, ரைலீ ரூஸோவ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோயிப் மாலிக்(துணைக்கேப்டன்), சவுத் ஷகீல்
  • பந்துவீச்சாளர்கள்: ஹசன் அலி, மிர் ஹம்சா, அப்ரார் அகமது, அகேல் ஹொசைன்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement