
Keegan Petersen Ruled Out Of South Africa's Tour Of New Zealand Due To Covid (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17ஆம் தேதியும், இரண்டாவது டெஸ் போட்டி பிப்ரவரி 25ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இத்தொடருக்கான 17 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் கீகன் பீட்டர்சன்னுக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.