பால் ஆடம்ஸ் சாதனையை தகர்த்த கேசவ் மஹாராஜ்!
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பால் ஆடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இதில் தென் ஆப்பிரிக்கா அணி வீரரான கேசவ் மகாராஜ். வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் முன்னனி பந்து வீச்சாளர்களில் ஒருவரான பால் ஆடம்ஸ் சாதனையை மகாராஜ் முறியடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களில் 134 விக்கெட்டுகள் வீழ்த்தி 2ஆவது இடத்தில் இருந்த பால் ஆடம்சை பின்னுக்கு தள்ளி 136 விக்கெட்டுகளுடன் கேசவ் மகாராஜ் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஹக் டெய்ஃபீல்ட் 170 விக்கெட்டுகளுடன் உள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now