
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டி நேற்று இரவு அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணிக்காக பங்கேற்று விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னணி வீரரான பொல்லார்டு டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அந்த சாதனையானது, நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தான் வீசிய முதல் ஓவரிலேயே கெயில் மற்றும் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். நேற்றைய போட்டிக்கு முன்னர் 298 விக்கெட்டுகள் எடுத்திருந்த பொல்லார்டு நேற்று கெயில் மற்றும் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 300 விக்கெட் கைப்பற்றினார்.